சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா?
சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா? அப்படி சிலைகளை வீட்டில் வைக்க கூடாது என பொதுவான கருத்து உள்ளதே. அது உண்மையா? ஏன் அப்படி சொல்லப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம். 🙏 பொதுவாக அரை அடி உயரம் உள்ள விக்ரகங்களை வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால் அதற்கு மேல் உள்ள விக்ரகங்களை வைத்து வழிபடுவதை தவிர்க்கலாம்.காரணம் கருங்கல் சிலைகள், பளிங்கு சிலைகள், பஞ்சலோக சிலைகள், அல்லது ஸ்படிக சிலைகள் என எந்த வகை சிலைகளாக இருந்தாலும் கண்டிப்பாக அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.இது சிலைகளை வைத்து கும்பிடுபவர்களில் முக்கியமான கடமை. 🙏 எந்த நாளில் அபிஷேகம் செய்யலாம்: விநாயகர் சிலை வைத்திருப்பவர்கள் சதுர்த்தியில் அபிஷேகம் செய்யலாம்.சிவபெருமான் சிலை அல்லது லிங்கம் வைத்திருந்தால் பிரதோஷத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். முருகன் சிலை வைத்திருந்தால் சஷ்டிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். நாம் எந்த சிலையை வைத்திருக்கிறோமோ அந்த தெய்வத்திற்கு உரிய நாள் வரும் போது கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் அந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். 🙏 நித்திய நெய்வேத்தியம்: எந்த...
Comments
Post a Comment