கோட்சார சனி
சனியுடன் எந்தெந்த கிரகமெல்லாம் சேருகிறதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயத்தை நமக்கு
தாமதப்படுத்தி கொண்டே இருப்பார்.
சனி இருக்கும் பாவமும் சரி சனியுடன் சேரும் கிரக காரகத்துவம் சரி
எப்போதுமே அடுத்தவர்களின் திருஷ்டியை,
தாக்கம் ,
ஏக்கம் ,
வயிறு எரிச்சல் ,
பொறாமை போன்றவற்றை ஈர்த்துக் கொண்டே இருப்பார்.
அதனால்தான்
சனி இருக்கும் பாவத்தையும் சனியுடன் சேரும் கிரக காரகத்துவம் சார்ந்த விஷயத்தையும் மற்றவரிடம் தூக்கி பெருமை பேசக்கூடாது.
1. சனி+செவ்வாய்
சனியும் செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் செவ்வாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சனி பகவான் தாமதப்படுத்தி கொண்டே இருப்பார்.
ஜாதகர் தொழில் ரீதியாகவோ உத்தியோகம் ரீதியாகவோ தான் எடுக்கும் முதல் முயற்சியே தாமதப்படுத்தி கொண்டே இருப்பார்.
என்னதான் risk எடுத்து வேகமாக ஒரு விஷயத்தை செய்து முடித்தாலும் அதனுடைய result முடிவு மிகவும் தாமதமாகத்தான் கிடைக்கும்.
வாழ்க்கையின் நடக்க கூடிய எல்லா முக்கியமான விஷயங்களையும் சனி பகவான் தாமதப்படுத்தி கொண்டே இருப்பார்.
மூன்றுமாதத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயத்தை நான்கு ஆண்டுகள் கற்றுக்கொள்ள வைப்பார்.
ஜாதகர் சொன்ன வார்த்தையை சொல்லிக் கொண்டிருப்பார்.
கேட்ட கேள்வியைக் கேட்டு கொண்டிருப்பார்.
வீடு, வண்டி,வாகனம், சொத்து உத்தியோகம்
போன்றவற்றை இந்த ஜாதகருக்கு தாமதித்து கொண்டே இருப்பார்.
உத்தியோகத்தை கிடைக்காமல் செய்வார். இல்லையென்றால் கிடைத்த உத்தியோகத்தை நிலைக்காமல் செய்வார்.
இல்லை என்றால் உத்தியோகம் நிலையாக இருக்காமல் வேறு வேறு நிறுவனத்திற்கு நம்மை மாற்றிக் கொண்டே இருப்பார்.
🌹🌹🌹
சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும் ஜாதகர்
எப்பொதுமே வீடு வண்டி, வாகனம், சொத்து உத்தியோகம் ,போன்றவற்றை பற்றி வெளியில் பெருமை பேசக்கூடாது.
மீறிப் பேசினால் சனீஸ்வரர் அனைத்தையுமே காலி செய்துவிடுவார்.
🌹🌹🌹
2 . சனி + புதன்
சனி புதன் சேர்க்கை ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு புதன் காரகத்துவம் சார்ந்த அனைத்து விஷயத்தையும் late அல்லது தாமத படுத்துவார்.
PAN card, Aadhar card, licence certificates ,degree certificates documentation forms
போன்ற புதன் காரகத்துவம் சார்ந்த விஷயத்தை நமக்கு கிடைக்க
ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றால் அதையும் தாமதம் செய்வார்.
🌹🌹 கடன், சீட்டு, loan போன்றவற்றை அடுத்தவர்களிடம் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் இல்லை apply செய்தாலும் அது நம்மிடம் வருவதற்கே சனி தாமதப்படுத்தும்.
🌹🌹 சனி புதன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் எப்போதுமே தன்னுடைய talent.படிப்பு, வித்தை போன்றவற்றைப் பற்றி வெளியே பெருமை பேசக்கூடாது.
மீறிப் பேசினால் புதன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் அடுத்தவர்களின் வயிறு எரிச்சல், பொறாமை, ஏக்கம் தாக்கம் போன்றவற்றை ஈர்த்து ஈர்த்து அந்த கிரக காரகதுவத்தை வச்சி செய்துவிடுவார்.
சனி புதன் சேர்க்கை இருப்பவர்கள் எப்போதுமே தன்னுடைய படிப்பை பற்றியோ தன்னுடைய அறிவை பற்றியோ வெளியே அதிகமாக பேசக்கூடாது.
முதலில் ஒரு பாவத்தில் சனி புதன் சேர்க்கை இருந்து அல்லது சனி செவ்வாய் சேர்க்கை இருந்து முதலில் clock wise orderல் யார் முதலில் இருக்கிறார் யார் பின்னால் இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
★சனிக்கு முன் clock wise orderல் புதன் இருந்தால் இந்தப் பலன் பொருந்தாது.
அங்கு புதன் தான் வேலை செய்யும்.
சனியுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
நமது ஜாதகத்தில் முதலில் யார் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
அனுஷம் 1 ம் பாதத்தில் செவ்வாயும்
கேட்டை 3-ம் பாதத்தில் சனியும் இருந்தால்,
செவ்வாய்தான் order wiseல் சனியை தொடுகிறது.
இப்பொழுது சனியுடன் தாக்கம்தான் செவ்வாய்க்கு இருக்கும்
🌹🌹
புதன் அல்லது சந்திரன் order wiseல் சனிக்கு முன் இருந்தால்..
அங்கு சனியின் தாக்கம் இருக்காது.
புதன் சந்திரனுடைய தாக்கம்தான் சனிக்கு இருக்கும்.
🦋🦋🦋
ஒவ்வொரு கிரகமும் சனியுடன் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
1. சனி +செவ்வாய்
சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். அல்லது மாறிவிடும்.
2.(சனி, புதன்)
★சனி புதன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் கடன் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
3.(சனி ,சுக்கிரன்)
சனி சுக்கிரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்களின் திருமணத்தை late செய்யும். அல்லது திருமண வாழ்க்கையில் திருப்தி சந்தோஷம்.தார்மீக ரீதியாக இல்லாமல் செய்துவிடும்.
இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்துவிடுவார்.
4.(சனி ,சந்திரன்)
★சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் வேகமாக இருக்க வேண்டிய இடத்தில் மெதுவாகவும் மெதுவாக இருக்க வேண்டிய இடத்தில் வேகமாகவும் நடந்து கொள்வார்கள் அல்லது இருப்பார்கள்.
★தாயின் மூலம் கிடைக்கக் கூடிய அன்பு, சுகத்துக்கும்,ஏக்கம் தார்மீகம் இவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் போகும்.
★சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திலும் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
★கையில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் தன் ஆசைப்பட்டதை தன் விருப்பப்பட்ட உணவை அதிகமாக சாப்பிட முடியாது.
5.(சனி, குரு)
★சனி குரு சேர்க்கை இருக்கும் ஜாதகங்களில் குழந்தை பிறப்பதை தாமதப்படுத்தும், இல்லை என்றால் பிறந்த குழந்தை மூலம் எந்த பிரயோஜனமும் இவர்களுக்கு இல்லாமல் செய்து விடும்.
★வருமானத்தைப் தடை செய்துவிடும்.அல்லது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
★இல்லையென்றால் பண கஷ்டத்தை கொடுத்துவிடும்.
★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்திடுவார்.
6.(சனி ,சூரியன்)
★அரசாங்கம் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து documentsம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் late செய்வார்.
★அரசாங்கம் சார்ந்த அங்கீகாரங்களை நமக்கு கிடைப்பதற்கு தாமதப்படுத்தும்.
★தந்தையின் மூலம் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய சுகம் ,துக்கம், ஏக்கம்
தார்மீகம் உதவி,பயன்.
★இவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் இல்லையென்றால் கிடைக்காமல் போய்விடும்.
★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்துவிடுவார்.
Comments
Post a Comment