சர்க்கரை நோய்

பொதுவாக சர்க்கரை நோயிற்கு சுக்கிரன் மட்டுமல்லாது சந்திரனும் பாதிக்கப்பட வேண்டும்.


 பொதுவாக சந்திரன் பாதிக்கப்படாமல் இருந்து சுக்கிரன் மட்டுமே பாதிக்கப்படும் போது சர்க்கரை நோய் வராது.

 மேற்கண்ட நிலைகளில் சுக்கிரன் காரகங்கள் பிற பாதிக்கப்படும்.

 அதாவது சந்திரன் எந்த வகையிலும் 4,6,8,12 பாவத் தொடர்பினைப் பெறாமல் இருந்தால் சர்க்கரை வராது.

 அதாவது மேற்கண்ட அமைப்பில் சுக்கிரன் 8,12 தொடர்பு பெற்றாலும் கூட சந்திரன் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு சர்க்கரை நோய் வராது.


சந்திரன் எந்த வகையிலும் அதாவது 4,6,8,12 பாவ முறைகளுக்கு நட்சத்திரமாக, உப நட்சத்திரமாக, உப உப நட்சத்திரமாக அமையாமல் இருப்பது சிறப்பு.

 தசா புக்திகளுக்கு தகுந்தவாறு சந்திரனின் தொடர்புகள் மாறும் என்பது அறிந்ததே.
எனவே சந்திரன் பயணிக்கும் நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் 4,6,8,12 பாவ முறைகளுக்கு நட்சத்திரமாக, உப நட்சத்திரமாக , உப உப நட்சத்திரமாக வராமல் இருப்பது நல்லது.

 சந்திரன் மேற்கண்ட அமைப்புகளில் பாதிக்கவில்லை.
ஆனால் சுக்கிரன் பாதிக்கப்பட்டுள்ளது எனில்,

பெண்கள் மூலம் அவமானம், 

மனைவியிடம் கருத்து வேறுபாடு,

வாகன  விபத்து

தனது ‌‌சொந்தப் பணத்தை மற்றவர்களிடம் ஏமாந்து விடுதல்.

ஆடம்பரமான, பகட்டான வாழ்க்கை அனுபவிக்க முடியாது.

கேளிக்கை , தாம்பத்தியம் போன்ற காரகங்களையும் அனுபவிக்க முடியாது.

✈️சந்திரன் சமைத்த உணவுகளுக்கு காரகன்.

எனவே எல்லாவித உணவுப் பொருட்களுக்கும் காரகன் என்பதால், சந்திரன் ஒற்றைப்படை பாவங்களைத் தொடர்பு கொண்டால், எல்லாவித உணவுகளையும் அதாவது சுக்கிரன் காரகமாக
இனிப்பு உட்பட,  உடல் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும்.
அதாவது எந்த உணவும் உடலைப் பாதிக்காது.

குறிப்பாக சந்திரன் மனோகாரகன் என்பதால் , உடலுக்கு தீங்கு செய்யும் உணவுப் பொருட்கள் மீது ஜாதகருக்கு நாட்டம் இருக்காது.

இயற்கையாகவே மனம் உடலுக்கு நன்மை செய்யும் உணவுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சுக்கிரன் கெடாமல் சந்திரன் மட்டுமே கெட்டாலும் சர்க்கரை வரும் என்று சொல்ல முடியாது.

மேற்கண்ட அமைப்பில்,
ரத்தம் கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

சுக்கிரனும் இணைந்து கெட்டால் மட்டுமே ஜாதகருக்கு சர்க்கரை நோய் வரும்.

Comments

Popular posts from this blog

சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா?

kp astrologer