சுக்கிரன்

Jothisha Aacharya

Kaniprakash M

8056245107


சுக்ரன் 5 ம்பாவ உபநட்மாக வந்து ஒற்றைபடை பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்..


5---1,3,5,7,9,11தொடர்பு கொண்டால் 

சிற்றின்பமும் மற்றும் அனைத்து சுகங்களுக்கும் சுக்ரனே காரகர் என்பதால் 



கேளிக்கை ஆடம்பரம் மது மாது போன்ற அனைத்து சுகங்களை யும் சிறப்பாக அனுபவிப்பார். 


அனைத்து கலை ரசனைக்கும் சுக்ரனே காரகர் என்பதால் 

எதையும் அழகாக அனுபவிப்பார். 


5பாவத்திற்கும் சுக்ரன் காரகர் என்பதால் ஒற்றைபடை பாவங்களை தொடர்பு கொள்வதால் இங்கு சுக்ரன் 

"காரகோ பாவ விருத்தி" அடைகிறார் .


சுக்ரன் என்பதால் 

5-1 தொ.ஜாதகருக்கு

 நல்ல ஆழ்ந்த அறிவும் இயற்கை தன்மை உடையவர். 


5-3தொடர்பு ஜாதகருக்கு நல்ல சிந்தனை யாளர் கதை கட்டுரை எழுதுவதில் நல்ல கற்பனை சக்தி உள்ளவர் .


5-5 தொடர்பு 

ஜாதகர் மிகவும் அழகான வர்

கவர்ச்சி வசீகரமானர் காதல் 

உணர்ச்சி கள் அதிகமாக இருக்கும் 


மற்றவர்களுக்கு இவர் மீது ஒர் ஈர்ப்பு இருக்கும். 

விந்து உற்பத்தி ஹார்மோன் 

மற்றும் வெள்ளை.மற்றும் சிவப்பு அணுக்கள் உற்பத்தி நன்றாக இருக்கும். 


5-7தொடர்பு ஜாதகருக்கு 

காதல் மூலமாக திருமணம் நடக்கும்.5ம்பாவ காரக ங்கள்

சமநிலை யில் இயங்கும். 


5--9தொடர்பு சுக்ரன் என்பதால் 

கேளிக்கை உல்லாசம் சல்லாபம் போன்ற வற்றில் நாட்டம் அதிகம். மற்றும் குழந்தை களுக்கு ஆடம்பர செலவு கள் செய்வார். 


5---2,4,6,10தொடர்பு 

ஒற்றை படை பாவங்கள் 2,4,6,10தொ.கொள்வது மிகவும் உன்னத மான அமைப்பு. 

சுக்ரன் என்பதால் 5பாவம் கமிஷன் விளையாட்டு கலை துறை அதாவது சினிமா நாடகம் போ.காரகர் சுக்ரனும் அதே பாவத்திற்கு காரகர் ஆவார் .


ஆதலால் மேற்கண்ட துறையில் அற்புதமான நிலை யும் அபரிமிதமான பொருளாதார த்தையும் பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை. 


கழிஷன் துறையில் புதனும் சேர்ந்தால் அபரிமிதமான பணவரவு கிடைக்கும் 


விளையாட்டு துறையில் 

சுக்ரனும் செவ் சேர்ந்து விட்டால் பெண்கள் விளையாடும் விளையாட்டு துறையில் அபரிமிதமான பணவரவு கிடைக்கும். (டென்னிஸ்,பேஸ்கட் பால்)


கலைத்துறையில் சொல்லவே வேண்டாம் மிகவும் அற்புதமான அபரிமிதமான பணவரவு கொட்டும் (நடனக்கலை,மற்றும் காதல் சம்பந்தமான அனைத்து படங்கள்)சுக்ரன் மற்றும் சனிசேர்க்கை.(நடனகலை)


5--8,12தொடர்பு கொண்டால்

ஜாதகர் மிகவும் வலி வேதனைகளை அனுபவிப்பார்.


சுக்ரன் என்பதால் காதல் தோல்வி மூலமாக வும் மற்றும் குழந்தை இறப்பு மூலமாக வும் 

பெண்களுக்கு சித்தபிரமை. 

ஏற்படும். 


மற்றும் இருதய கோளாறு முதுகுதண்டு பிரச்சனைகள் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படும். கலைத்துறையில் கழிஷன் துறையில் எதிர்மறையான விளைவுகள் அல்லது தோல்வி யை தரும். 




Comments

Popular posts from this blog

சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா?

kp astrologer