ராகு பகவான்



 ராகு, எந்த அமைப்பில் கடுமையாக கெட்டிருக்கும் பொழுது, அதனுடைய தசை ,புத்திகள் கூட கடுமையான அமைப்பில் கெடு பலனை கொடுக்கும்?

 ராகு, ஜோதிடத்தில் ஒரு பச்சோந்தி கிரகம் என்று அழைக்கப்பட்டாலும், ஒரு சில அமைப்புகள் ராகுவிற்கு ஏற்படும் போது, அதனுடைய  தசா மற்றும் புத்திகளில் கூட, கடுமையான கெடுபலன் செய்வதை பார்க்க முடிகிறது.

 ஜோதிடத்தில், ராகு, சூரியனையே ,தன் முதல் நிலை விரோதியாக கருதுகிறார்.

 எந்த நிலையிலும் ராகுவோடு, சூரியன், 5 டிகிரிக்குள், இருந்து, ராகு திசை நடந்தால்,ராகு தசை கண்டிப்பாக பிரச்சினையை கொடுக்கிறது.

 பல சாம்ராஜ்யங்கள் ,சரிந்து சல்லி சல்லி ஆனது இது போன்ற அமைப்பே.



  நடைமுறை வாழ்க்கையில், கோடி கோடியாக கொட்டி வாழ்ந்தவர்கள், தெருக்கோடியில் நிற்பதெல்லாம் இந்த அமைப்பில் தான்.

 ராகு, சூரியனின் நட்சத்திர சாரத்தில் இருப்பதும் நல்ல அமைப்பல்ல.

 இதனுடன் பாவ கிரகமான  சனி தொடர்பில் இருப்பது, மிக மிகக் கடுமையான  கெடு பலனை, ராகு திசையில் கொடுக்கிறது.

 ராகுவோடு, செவ்வாய், சனி இணைவதும், ராகு திசை நல்ல அமைப்பில் பலன் தராது.

 ராகு, சூரியனின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்து, சனி ,செவ்வாயின் தொடர்பை பெறுமானால், நிச்சயமாக ராகு திசை  எதிர்மறையான அமைப்பிலேயே பலன் கொடுக்கும்.

 இந்த அமைப்பை பெற்றவர்கள் ,ராகு திசையில் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 இந்த அமைப்போடு, எந்த பாவகத்தில் ராகு அமர்ந்துள்ளதோ, அந்த பாவகத்தை கெடுக்கும்.

இதில் குறிப்பாக, ராகு திசை நடைமுறையில் இருக்க வேண்டும்.

 உதாரணமாக,
 ஏழாம் பாவகத்தில் ராகு தனித்து அமர்ந்தாலும், சனி,செவ்வாய் தொடர்பை பெற்று ,ராகு திசை நடக்குமானால், ராகு திசையில் திருமண வாழ்வில், பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

 ஏழாம் பாவக  காரக அமைப்புகள் அனைத்தும் கெடும்

 ராகு திசையை , வாழ்க்கையில் சந்திக்க இருப்பவர்கள், உங்களுக்கு ராகு திசை, எந்த மாதிரியான பலனை கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து,  அதற்கேற்ற மாதிரியான அமைப்பில் செயல்படுவது நல்ல பலனை கொடுக்கும்  அல்லது கெடு பலனை ஓரளவு குறைக்கும்.

ஓம் நமசிவாய

ஜோதிட திலகம் 
கனி பிரகாஷ் 
8056245107

Comments

Popular posts from this blog

சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா?

kp astrologer