லக்ன பாவ குணநலன்கள்

JKPATC லக்ன குனநலன் மேஷலக்காரர் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என அடம்பிடிப்பார். மற்றவர்களின் கருத்தை ஏற்கமாட்டார்.பிறந்ததிலிருந்து வளர்ச்சி பாதையில் இருப்பார். ஒரு சுயநலவாதியாகவும் இருப்பார். முன்கோபமும் முரட்டுத்தனமும் இருக்கும். ரிஷப லக்ணகாரர்கள் பொறுமைசாலிகள். பணம் பொன் பொருள் மீது ஆசையுள்ளவர்கள். வளர்ச்சியில்லாமல் ஒரேநிலையில் இருப்பவர்கள். தன்னை அழகு படுத்துவதில் நாட்டமுள்ளவர்கள். மிதுன லக்ணகாரர்கள் இரட்டை மனம் படைத்தவர்கள். நிலையில்லா புத்தியுடையவர்கள். ஒருசெயலை இருமுறை செய்யக்கூடியவர்கள். அதி புத்திசாலிகள். தகவல் தொடர்புகளில் அதிக கவணம் செலுத்துவார்கள். கடகலக்ணகாரர்கள் யாரையும் எளிதில் நம்பக்கூடியவர்கள். செக்ஸ் விஷயத்தில் ஒருதிறந்த புத்தகம். எல்லோரையும் அறிந்து வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தெரியாத நபர்களே கிடையாது. இளகிய மனம் படைத்தவர்கள். வீடு நிலம் வாகனத்தை சொந்தமாக வைத்திருப்பார்கள். எப்போதும் வளர்ச்சிப்பாதையில் இருப்பவர்கள். சிம்மலக்ணகார்கள் எல்லோருடைய ஆலோசணைகளை கேட்டாலும் தான...